கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன.
முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் கொமெடி சற்று தூக்கலாக இருக்கணும் என சொல்லி அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு.
தொடக்க காலத்திலிருந்து தனக்கு கொமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் வடிவேலு.
சில அரசியல் மாற்றங்கள் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு முழுவதுமே வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த வடிவேலுக்கு இது திரையுலகில் மறுபிரவேசமாகும்.
இதுதவிர ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் “ஆப்ரிக்காவில் வடிவேலு” என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. |