MailPrint
பிரபு சாலமன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்
[ Thursday, 03 January 2013, 05:56.55 AM GMT +05:30 ]
இயக்குனர் பிரபு சாலமன், தான் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதமை ஒப்பந்தம் செய்துள்ளார்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், மணிரத்னத்தின் கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கடல், வரும் பிப்ரவரி மாதம் 1ம் திகதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. இந்த படத்தில் கௌதமுக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள் துளசி நடித்துள்ளார்.

இந்த 2 கலைவாரிசுகளையும் படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளநிலையில் கௌதம் பிரபு சாலமனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

பிரபு சாலமன் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனனை வைத்து எடுத்த கும்கி படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நல்ல வேளையில் புதிய படத்திற்கான முயற்சியை தொடங்கிவிட்டார் பிரபு சாலமன்.

முதலில் பிரபுவின் மகனை இயக்கிய அவர் தற்போது கார்த்திக்கின் மகனை இயக்கவிருக்கிறார்.