நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் சிறிய வகை படகில் ஆற்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூழ்கியதில் படகில் பயணித்த மைக் பலியானார்.
இவர் கடந்த 2003ம் ஆண்டு வெளியான கிங் காங் மற்றும் 2006ம் ஆண்டு வெளியான பெல்லோசிப் ஆப் த ரிங்க் ஆகிய படங்களில் பணிபுரிந்ததற்காக ஆஸ்கர் விருது வென்றவர்.
இந்த விருதினை தன்னுடன் பணியாற்றிய ஈத்தன் வேன் டர் ரைன் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து நியூசிலாந்து ஹெரால்டு செய்தித்தாளில் வெளியான தகவலில், பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் ஆகியோர் ஹாப்கின்ஸ் உடன் பணியாற்றியுள்ளனர்.
அவர்கள் மைக்கை இழந்து வாடுவார்கள் என்று இயக்குநர் பீட்டர் ஜாக்சன் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், மைக் மற்றும் ஈத்தன் ஆகியோர் டிரான்ஸ்பார்மர்ஸ் படத்திற்காக ஆஸ்கர் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |