இப்படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால், இயக்குனர் திரு, நடிகை திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமர் படத்தில் விஷாலுடன் மிகவும் நெருங்கி நடித்தது குறித்து த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த த்ரிஷா, எனக்கும் விஷாலுக்கும் நீண்ட நாள் நட்பு. ஆனால் நாங்கள் நடிப்பதற்கு தற்போதுதான் வாய்ப்பு வந்தது.
நாங்கள் நண்பர்கள் என்பதால் சீரியஸான காட்சிகள் நடிக்கும்போதுகூட சிரித்துக் கொண்டே இருந்தோம் என்றார்.
திருமணம் குறித்து பதிலளித்த த்ரிஷா, எனக்கு பிடித்தமானவரை சந்தித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். |