யுத்தம் செய் படத்தில் பயிற்சி பெண் பொலிஸ் வேடம் ஏற்றவர் தீபா ஷா. தற்போது சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், அறிமுகப் படத்தில் பயிற்சி பெண் பொலிசாக வேடம் ஏற்றிருந்தேன். சில்லுனு ஒரு சந்திப்பு எனது 2வது படம். இதில் விமலின் ஜோடியாக நடிக்கிறேன்.
கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய காதல் படமான சில்லுனு ஒரு சந்திப்பில், எனக்கு 2 பாடல்கள் உள்ளன.
நடனத்தில் நான் பயிற்சி பெற்றிருக்காவிட்டாலும் இப்போது அதற்கான பயிற்சியில் இருக்கிறேன்.
பாலிவுட் கதாநாயகிகள் கேத்ரினா, பிரியங்கா சோப்ராவுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் விரு கிருஷ்ணாஜியிடம் கதக் பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். |