Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாய்லாந்து குகையில் சிறுவர்களை காப்பாற்றிய போதே சினிமாவாக்க முயற்சித்த படக்குழு

தற்சமயம் உலகில் உள்ள அனைவரும் அறிந்திருக்கும் ஒரு செய்தி எதுவென்றால் அது தாய்லாந்து குகையில் 12 கால்பந்து சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் சிக்கி கொண்ட விஷயம் தான். கடந்த 2ம் தேதி குகையில் சிக்கி கொண்ட அவர்கள் நேற்று[10ம் தேதி] தான் மீட்கப்பட்டனர்.

இந்த 9 நாட்களாக குகைக்குள் அவர்களும் வெளியே அவர்களை மீட்க மீட்புக்குழுவும் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஒரு ஹாலிவுட் படக்குழுவை சேர்ந்த தயாரிப்பாளர்களான மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் என்போர் இந்த சம்பவத்தை படமாக்க நேராக அந்த குகைக்கே வந்துவிட்டனர்.

இதனால் கடுப்பான மீட்புக்குழு அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்க பார்த்தனர். ஆனால் அவர்களோ நாங்கள் வரவில்லை என்றால் வேறு யாராவது வர தான் போகிறார்கள், அதனாலயே நாங்கள் முந்திக்கொண்டோம் என வாதாடினர்.

ஏனெனில் உலகம் முழுவதும் ரீச் ஆன இந்த செய்தியை படமாக்கினால் நிச்சயம் வெற்றி பெரும் என்பது அவர்களது எண்ணம்.