Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியிடம் விட்டதை, சிவகார்த்திகேயனிடம் பிடித்து விட்டார் பிரபல விநியோகஸ்தர் - விபரம் உள்ளே

தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தராக திகழ்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். இவர் ரஜினியின் நண்பராக இருந்தாலும் லிங்கா பிரச்சனைக்கு பிறகு அவரது நலம் விரும்பி லிஸ்டில் இல்லையாம்.

கபாலி படத்தின் விநியோகத்தை முதலில் கண்டுகொள்ளாமல் இருந்து, கடைசி நேரத்தில் வியாபாரம் நடந்ததெல்லாம் சினிமா வட்டாரத்தில் இருக்கும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தமிழ் சினிமா மக்களிடம் நல்ல பெயரை பெற்று, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுக்கும் ஹீரோவாக வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அவர் நடித்துள்ள ரெமோ படத்தின் கோவை பகுதி விநியோக உரிமையை வாங்கியிருக்கிறாராம் திருப்பூர் சுப்பிரமணியம். ரெமோ படத்தை பொறுத்தவரை இவர்தான் முதல் விநியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் ரஜினியிடம் விட்டதை, சிவகார்த்திகேயனிடம் பிடித்து விட்டார் திருப்பூர் சுப்பிரமணியம்.

என்னால் நம்ப முடியவில்லை - அதிர்ச்சியில் ராதிகா !