தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு சட்டம் பிறப்பித்துள்ளது என்று நேற்றே அறிவித்தது.
இதனையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஹிப்ஹாப் ஆதி போன்றவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டனர். இன்று காவல் துறை போராட்டக்காரர்களை இன்றுடன் கலைக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து காவல் அதிகாரிகளும் போராட்டக்கார்களை குண்டுக்கட்டாக தூக்கி கலைத்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்களம் வன்முறை தளமாக மாறியது, இதனால் காவல்துறை பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் கண்ணீர்ப்புகை தடியடி நடத்தி அதிகாரத்தை கையிலெடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் வன்முறையை மேலும் தூண்டும் விதத்தில் காவல்துறை நடந்துள்ளது. மேலும் சில காவல் அதிகாரிகள் ஆட்டோவுக்கு தீவைப்பது போன்ற வீடியோக்கள் கிடைத்துள்ளது. இதை கண்ட நடிகர் சித்தார்த் ட்விட்டரில் "தமிழ்நாடு சட்ட ஒழுங்கிற்கு இன்று கருப்பு நாள், கண்டிப்பாக இதற்கு பதில் சொல்ல வேண்டும். யாருக்காக எதற்க்காக செய்தீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Black day for #TamilNadu law enforcement. They better have answers ready. The questions are burning! What did you do today? Why? For whom?
— Siddharth (@Actor_Siddharth) January 23, 2017