Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விளம்பரத்துக்காக டாப்ஸி செய்த செயலை பாருங்களேன்

பிரபல நடிகை டாப்ஸி ரன்னிங்ஷாதி.காம் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று யோசித்தவருக்கு திடீர் என ஒரு ஐடியா கிடைத்தது. திருமணம் பற்றிய படம் என்பதால் திருமண நிகழ்ச்சிக்கு செல்லலாம் என அவர் முடிவு செய்தார்.

மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருமண கொண்டாட்டத்தின் ஒன்றான சங்கீத் நிகழ்ச்சியில் டாப்ஸி அழையாக விருந்தாளியாக கலந்து கொண்டார். குஜராத்தி திருமணத்தில் அவர் தனது படத்தில் வரும் பஞ்சாபி பாடலான டிம்பி தீ நாலுக்கு டான்ஸ் ஆடினார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்களும் டாப்ஸியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள். இந்த அனுபவத்தை பற்றி டாப்ஸி கூறுகையில் உண்மையில் அழையா விருந்தாளியாக சென்ற இந்த திருமணத்தில் மிகவும் த்ரில்லாகவும் அதே சமயம் படபடப்பாகவும் இருந்தது என்று கூறினார்