இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சினிமா நடிகர்களில் மிகவும் பாதிக்கப்பட்டது த்ரிஷா மற்றும் விஷால் தான்.
த்ரிஷா பீட்டா அமைப்பை விட்டே வெளியேறிவிட்டார். இந்நிலையில் விஷால் எனக்கு பீட்டா என்றாலே என்ன வென்று தெரியாது, வேண்டுமென்ற சிலர் என்னை இதில் சிக்கவைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோ மூலம் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது " மறுபடியும் என்னை பற்றி தப்பான தகவல் பரவி வருகிறது, அய்யா சகாயம் அவர்களின் பெயரில் இருக்கும் முகப்புத்தகத்தில் மாணவர்கள் மீது தடியடி சரி தான் என்று விஷால் கூறியுள்ளார் என்று செய்தி பரவி வருகிறது.
தயவு செய்து சொல்கிறேன் என்னை பழி வாங்க இது நேரம் அல்ல, அப்படி என்னை பழி வாங்க வேண்டுமா அதற்கு வேறு தளம் தேடுங்கள், இந்த மாணவர்கள் விஷயத்தில் வேண்டாம் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
Our #Vishal 's Clarification video regarding the recent rumour about him @johnsoncinepro pic.twitter.com/0w5sUpWsWq
— FridayCinemaa (@FridayCinemaa) January 23, 2017