போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதல்- படுகாயம் அடைந்த நடிகர் இமான் அண்ணாச்சி
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்காக இளைஞர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் கடைசியில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி எல்லாம் நடத்தி பெரிய கலவரமே நடந்துவிட்டது.
இந்நிலையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியையும் போலீசார் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு சில அடிகளும், அவருடன் இருந்த ஒருவருக்கு தலை, கால் என பலத்த அடி. இதனை தான் கடுமையாக எதிர்ப்பதாக வீடியோ மூலம் இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.