Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் ஜல்லிக்கட்டு தடை குறித்த கேள்விக்கு பதில் கொடுத்த பீட்டா இந்தியா

ஜல்லிக்கட்டு போராட்டம், காவல்துறையின் தடியடி, முதல்வரின் நடவடிக்கை என அனைத்தையும் பற்றி கமல்ஹாசன் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.

அதில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் உள்ளிட்ட விளையாட்டை தடை செய்ய பீட்டா முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பீட்டா அமைப்பின் சி.இ.ஓ பூர்வா ஜோஷிபுரா தற்போது பதிலளித்துள்ளார். பீட்டா இந்தியா அமைப்பு இந்தியாவை மையமாக கொண்டது. இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் கமல் கூறுவதுபோல் அமெரிக்காவில் நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு அதுகுறித்து முடிவு எடுக்கும் என்றும் கூறிய அவர் கமல் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.