Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது

ஜல்லிக்கட்டு பிரச்சனை சம்பந்தமாக பிரதமரிடம் பேச கிளம்பிய அமைச்சர்களுக்கே அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் விஷால் நான் பிரதமரை சந்திக்க போகிறேன் என்று கூறி டெல்லி பயணித்தார்.

அங்கு அவர் மோடிக்கு பதிலாக அமித்ஷாவிடம் தமிழகத்தில் எழுந்திருக்கும் கொதிப்பை பற்றி கூறினாராம். பிறகு அமித்ஷா, உங்களை மோடி கண்டிப்பாக சந்திப்பார் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் கடைசி வரை மோடியிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதால் ஒரு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் விஷால்.