உலகளவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான். இவரது படங்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் அதே வரவேற்பு இந்தியாவிலும் உண்டு.
இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு குங்ஃபூ யோகா என்ற படத்தின் மூலம் தமிழில் பேசப்போகிறார். இப்படம் ஆக்க்ஷன் அட்வென்ச்சர் கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஒரு சிறப்பு அம்சமாக ஹிந்தி நடிகர் சோனு சூட் ஜாக்கி சானுடன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை தமிழகமெங்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் வருகிற பிப்ரவரி 3 ம் தேதி வெளியிட உள்ளது