Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சேனல் பெயரை ஏன் கூறவில்லை? வரலக்ஷ்மி விளக்கம்

நடிகை பாவனா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி வந்தபிறகு, அத்தகைய சம்பவம் தானும் கடந்து வந்துள்ளேன் என வரலக்ஷ்மி சரத்குமார் கூறி அதிர்ச்சியளித்தார்.

ஒரு டிவியின் பிரோடக்ஷன் ஹெட் தன்னிடம் "வேறு விஷயங்களுக்கு எப்போது சந்திக்கலாம்?" என கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கேட்டதாக தெரிவித்தார்.

அவரை பற்றி சேனலில் அல்லது போலீஸிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை?, சேனலின் பெயரை ஏன் கூற மறுக்குறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் வரலக்ஷ்மியிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு அவர் ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

"பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தான் இந்த போராட்டம்.. ஒருவருக்கு எதிராக மட்டுமல்ல. நாட்டில் உள்ள எல்லா குற்றவாளிகளுக்கு எதிராக தான் நான் போராடுகிறேன். மேலும், அது ஒரு நபரின் தவறு அதற்காக அந்த சேனலின் பெயரை ஏன் கெடுக்கவேண்டும்" என தெரிவித்துள்ளார்.