Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் தற்கொலைக்கு முயற்சிசெய்த பிரபல நடிகை- காப்பாற்றிய சக நடிகர்

பிரபலங்களுக்கு தங்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அப்படி என்ன பிரச்சனையோ 1996ம் ஆண்டு சல்லாபம் படப்பிடிப்பில் நிஜமாகவே தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.

அண்மையில் ஒரு பேட்டியில் மஞ்சு வாரியர் இதுகுறித்து பேசுகையில், சல்லாபம் என்ற படத்தில் நானும், திலீப்பும் காதலர்கள், ஆனால் சில காரணங்களால் பிரிந்துவிடுவோம்.

இதனால் நான் தற்கொலை முயற்சி செய்ய முடிவு எடுக்க இறுதியில் மனோஜ் கே ஜெயன் என்னை காப்பாற்றுவார், இதுதான் கதை.

கதைப்படி ஓடும் ரயில் முன்பு குதிக்க செல்ல வேண்டும் அதற்குள் மனோஜ் வந்து காப்பாற்றுவார். ஆனால் நான் நடிப்பு என்பதை மறந்து கதாபாத்திரமாகவே மாறி ஓடும் ரயிலில் குதிக்க பார்த்தேன்.

நிஜமாகவே தற்கொலை செய்ய முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்த மனோஜ் வந்து என் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை கொடுத்தார். அவர் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன் என்கிறார் மஞ்சு.