Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையில் எனக்கு அல்சீமர் நோய்யே வந்தாலும் இந்த படத்தை என்னால் மறக்க முடியாது - பாகுபலி நடிகர் உருக்கம்

நேற்று பாகுபலி பார்ட் 2 படத்தின் தமிழ் இசைவெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது, இதில் குறிப்பாக நாசர் பேசுகையில் இந்தப் படத்தின் கதையை என்னிடம் வந்து அவர் சொன்னபோது வழக்கம்போல சிரித்துவிட்டு ‘நல்லாயிருக்கு’ என்றுதான் சொன்னேன். அப்போது எனக்கு இருந்த ஒரேயொரு கேள்வி, இவர் எப்படி இந்தக் கதையை எடுக்கப் போறார்ன்னுதான்.ஆனால் அசத்தலா எடுத்துக் காட்டியிருக்கார்.

இந்தப் படம் மிக பிரம்மாண்டமான படம், மிகப் பெரிய செலவுன்னு சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆர்ட்டிஸ்ட்டுகளை இவங்க பார்த்துக்கிட்டவிதம் அப்படியொரு அற்புதம். கிட்டத்தட்ட இந்த 5 வருஷமா நாங்க இதுல ஒண்ணா சேர்ந்து நடிச்சதால இது எங்களோட வாழ்க்கையிலே ஒரு பகுதியாவே மாறியிருச்சு.

எங்களால மறக்க முடியாத வாழ்க்கைக் கட்டம் இதுன்னே சொல்லலாம். உண்மையில் அல்சீமர் நோய் வந்தால்கூட எங்களால் இந்தப் படத்தை மறக்க முடியாது. ‘பாகுபலி-1’ எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பல மடங்கு அதிகமாக இந்த ‘பாகுபலி-2’-வும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை