Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரயில் பெட்டியில் தூங்கிய சிறுமிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்த பிரபல நாயகி- வெளிவராத உண்மை

பிரபலங்களில் சிலர் தங்கள் குடும்பத்தையும் தாண்டி வறுமையில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதியில் ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி அர்ச்சனா, ஆதிரா என்ற சிறுமிகள் படித்து வருவது மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் அவர் தனது சொந்த செலவில் 5 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி அந்த சிறுமிகளுக்கு வழங்கியுள்ளார்.

இதற்காக தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு சிறுமிகளுக்கு வழங்கிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை குதூகலிக்க வைத்திருக்கிறார்.