Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்

அஜித்தின் பிறந்தநாள் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் பல பிளான்கள் செய்து வருகின்றனர். அதேபோல் ஒருபக்கம் சில பிரபலங்கள் அஜித்துடனான தங்களது உறவு குறித்தும் பல பேட்டிகள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித், விஜய்யை வைத்து ராஜாவின் பார்வையிலே என்ற வெற்றி படத்தை இயக்கிய ஜானகி சௌந்தர் ஒரு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் அஜித் மிகவும் நல்ல மனிதர். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்று அவருக்கு தெரிந்தால் போதும் முதல் ஆளாக உதவி செய்வார்.

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவுவதில் பெரிதும் ஆர்வம் காட்டிவார், அதற்கு உதாரணம் அப்புகுட்டி. அண்மையில் கூட என்னை அறிந்தால் படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு உதவிசெய்துள்ளார்.

அவருடைய கடந்த கால விஷயங்கள், சொந்த விஷயங்களை என்னுடைய பகிர்ந்துகொள்வார். ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பின் போது நான், அஜித், விஜய் மூவரும் ஒன்றாக சாப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.

loading...