கல்லூரி காலத்தில் ரயில் பெட்டிகளில் பாடி காசு சம்பாதித்த பிரபல நடிகர்- ஒரு சின்ன பிளாஷ்பேக்
பிரபலங்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பிரபலம் ஆவதற்கு முன் நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். அப்படி தன்னுடைய முந்தைய கால சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா.
தற்போது இவர் மேரி பியாரி பிந்து படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது, என்னுடைய கல்லூரி காலங்களில் டெல்லியில் இருந்து மும்பை சென்ற பஷ்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நானும், என் நண்பர்களும் ஒவ்வொரு பெட்டியாக சென்று பாடி, நடித்திருக்கிறோம்.
அதை பார்த்துவிட்டு பயணிகள் எங்களுக்கு பணம் கொடுத்தார்கள். ரயிலில் பாடி, நடித்து நிறைய சம்பாதித்தோம். ரயில் பாடகன் என்றும் கூட நீங்கள் என்னை அழைக்கலாம் என்று பேசியுள்ளார் ஆயுஷ்மான் குரானா.