Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் நீண்ட நாள் கனவு நிஜமானது - பூரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசுடன் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்‘ படத்துக்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

“வடசென்னை’ படத்தில் குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே இதுபோன்ற வேடத்தில் நடித்திருப்பதால் இதில் அதைவிட மாறுபட்ட நடிப்பை கொடுத்து வருகிறேன்.

இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தனுசுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.

‘துருவநட்சத்திரம்‘ படத்தில் நடிக்கிறேன். இது விக்ரம் நடிக்கும் படம் என்பது மட்டும்தான் தெரியும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை டைரக்டர் சொல்லவில்லை. எனக்கு தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேறியதில் மிகுந்த சந்தோசம் தான்