தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது இவர் பிரபல கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் குஷ்புவின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரனைக்கு பின் மிரட்டல் தகவல் புரளி என தெரியவந்துள்ளது.
இந்த செய்தி அவரது ரசிகர்களை சில நேரம் பரபரப்பில் ஆழ்த்திவிட்டது.