Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Welcome to tamil cinema- இப்படி எந்த நடிகரை அஜித் வாழ்த்தினார் தெரியுமா?

அஜித் எப்போதுமே வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்த தவறவே மாட்டார். அவருடன் பணியாற்றிய எல்லா கலைஞர்களும் அஜித் என்னை பற்றி கேட்டார், என் குடும்பத்தை பற்றி கேட்டார் என மகிழ்ச்சியுடன் கூறுவர்.

தற்போது அஜித்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார் இளம் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அவர் பேசும்போது, என்னுடைய முதல் படமான அபியும் நானும் படத்திற்கு பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் புதியவன் என்பதால் எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. இதனால் பதற்றத்துடன் நிகழ்ச்சியில் நின்று கொண்டிருந்தேன். திடீரேன யாரோ என் மேல் கை வைத்தார், யாரென்று பார்த்தால் அஜித் சார்.

முகத்தில் சிரிப்புடன் Welcome To Tamil Cinema என்று என்னை வாழ்த்தினார். அவரின் அந்த பேச்சு என் பதற்றத்தை குறைத்தது. நான் மிகவும் பயந்துபோய் இருக்கிறேன் என்பதை அஜித் உணர்ந்திருக்கிறார் என்றார்.