Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி கருப்புப் பணம் வைத்திருக்கிறாரா- சீமான் பேட்டியால் கொந்தளிப்பில் ரசிகர்கள்

ரஜினி தன்னுடைய ரசிகர்களை நீண்ட வருடம் கழித்து அண்மையில் தான் சந்தித்தார். தொடர்ந்து 5 நாட்கள் சந்தித்த இவர் முதல் நாள் மற்றும் கடைசி நாளில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருந்தார். அதில் இருந்து அரசியல்வாதிகள் ரஜினியை பற்றி விமர்சித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் சீமான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ரஜினியை பற்றி பேசும்போது, வெளிப்படையாக கபாலி படத்துக்கு அவர் இவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று கூற முடியுமா? எவ்வளவு வரி செலுத்தினார் என்று அவர் கூறுவாரா என பேசியுள்ளார். அவர் தன்னை நேர்மையானவர் போல் காட்டிக் கொள்கிறார்.

எனக்கு தெரிந்த வரை கமல்ஹாசன், மாதவன் போன்றவர்கள் தான் சரியாக இருக்கிறார்கள் என்றார்.