Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோத்தா என்ன நாங்க சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு வெயிட்டிங் - மாறிய பிரபல நடிகர் யார் தெரியுமா?

இந்தியா முழுவதும் கொண்டாடும் கிரிக்கெட் ஐ.பி.எல் தொடர்.

சூதாட்ட சர்ச்சையால் கடந்த 2 வருடங்களாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மற்ற அணிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். பெரும்பாலும் தோனி விளையாடிய புனே அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கடைசிவரை சிறப்பாக விளையாடிய புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்று கிண்ணத்தை இழந்தது.

இதனால் தமிழ் ரசிகர்கள் மீண்டும் அடுத்தவருடம் சென்னை அணியுடன் வந்து கலக்குறோம் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் ஜெய்யும் தொலைக்காட்சியில் தோனிக்கு முன்பாக நின்று சிஎஸ்கே அணியின் தோனி ஜெர்சியை அணிந்து அடுத்தவருட ஐ.பி.எல்லுக்காக காத்திருக்கேன் என டிவிட்டியுள்ளார்.