Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னுடைய மகளுக்காக மருத்துவமனை அறையை அலங்கரித்த பிரபல நடிகர்

பிரபலங்களில் நிறைய பேருக்கு இவ்வருடம் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் பெண் குழந்தை பிறந்தது மூலம் மிகவும் சந்தோஷத்தில் இருப்பவர் மலையாள நடிகர் அசிப் அலி.

இவர் தன்னுடைய குழந்தைக்காக மருத்துவமனை அறையை அழகாக அலங்கரித்துள்ளார். நிறைய பலூன்கள், இனிப்புகள், சாக்லெட் என அவர் அலங்கரித்த அந்த அறையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

அசிப் அலி மற்றும் சனா கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆடம் என்று மூன்று வயது ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.