Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பீப் பாடலை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன செய்தார்கள்- சிம்பு அதிரடி

சிம்புவின் AAA படம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. படத்தின் புகைப்படங்கள், சிம்பு-யுவன் கூட்டணி, மாஸ் வசனங்கள், சிம்புவின் கெட்டப் என ரசிகர்கள் படத்தை எதிர்ப்பார்க்க நிறைய காரணங்கள் இருக்கிறது.

அண்மையில் ஒரு பேட்டியில் சிம்பு பேசும்போது, இன்றைய காலத்தில் நல்ல விஷயங்கள் ரசிகர்களால் வரவேற்க்கப்படுவதில்லை. பீப் பாடலை கேட்டவர்கள் தேர்தலுக்கு வந்த பாடலை கேட்கவில்லை. இது கலியுகம், கெட்ட விஷயங்கள் மட்டுமே நல்லதாக தெரியும்.

கெட்டவனுக்கு தான் மாஸ், நல்லவனுக்கு மாஸ்லாம் இல்லை. மக்கள் மாறினால் சாமி படங்கள் எடுக்க நான் தயார். ஆனால் நம்பிக்கை இருக்கிறது அதுபோல் எப்போதும் நடக்காது என்றார்.