Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவாகரத்து பெற நினைத்த நடிகர் இப்போது சேர்ந்து வாழ நினைக்கிறாரா? நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

பிரபலங்கள் விவாகரத்து என்பது சாதாரண விஷயம். அண்மையில் கன்னட நடிகர் சுதீப் தனது மனைவி பிரியாவை பிரிய விவாகரத்து கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ததில் இருந்து அவரும், அவருடைய மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை.

அண்மையில் வழக்கு விசாரணைக்கு வர, நீதிபதி, விவாகரத்து வழக்கு இதுவரை 9 முறை விசாரணைக்கு வந்துவிட்டது. 9 முறையும் சுதீப் மற்றும் பிரியா ஆஜராகவில்லை. மாறாக அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி ஏதாவது காரணம் சொல்லி வருகிறார்கள்.

அடுத்த விசாரணையின் போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது சுதீப் மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாகவும் அதனால் தான் நீதிமன்றம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.