Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்

ரஜினி அரசியல் பிரவேசம் எப்போது என்று தான் எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். ஜூலை மாதம் அரசியலில் குதிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் செந்தில், “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்.. வரட்டும், அவர் இந்தியர்" என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அதிமுக'வில் இருப்பவர்கள் இடையே இருக்கும் பிரிவினையை பற்றி பேசிய அவர் "ஒரு சிலர் மட்டுமே அனைத்து பதவிகளையும் வைத்துள்ளனர், அதை மற்ற எம்.எல்.ஏ'களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.