Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாடி பாலாஜி குடும்ப பிரச்சனை- மீண்டும் போலீசில் புகார் அளித்த அவரது மனைவி

வெள்ளித்திரையில் ஒரு காமெடி நடிகராக கலக்கிய தாடி பாலாஜி தற்போது சின்னத்திரையில் வலம் வருகிறார்.

அண்மையில் இவரது மனைவி நித்யா, தன்னுடைய கணவர் சாதி பெயர் சொல்லி தன்னை துன்புறுத்துவதாகவும், அடிப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணையர் அலுவலகத்தில் நித்யா தற்போது புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பாலாஜி தன்னை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் நித்யா. பலபேருடன் தொடர்பு படுத்தி பேசி சித்ரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.