Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம், பிரபாஸுடன் நடிக்க விரும்பும் பிரபல பாலிவுட் நடிகை

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் ரன்பீர் கபூருடன் இணைந்து ஜக்கா ஜசூஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

ஜுலை 14ம் தேதி வெளியாக போகும் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரிடம், தென்னிந்திய சினிமாவில் யாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் விக்ரம் மற்றும் பிரபாஸுடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். விக்ரம் சிறந்த நடிகர் என்றும், பிரபாஸ் பாகுபலி படத்தில் மிகவும் அற்புதமாக தன் வேலையை செய்திருக்கிறார் என்றார். இதற்கு முன் இவர் மல்லேஸ்வரி, அல்லாரி பிடுகு என்று இரண்டு தெலுங்கு படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.