Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழக மக்களிடம் இவன்தந்திரன் குழு வைத்த கோரிக்கை !

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் கேளிக்கை வரிக்கு எதிராக திரையரங்களை மூடியுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இவன் தந்திரன், யானும் தீயவன் மற்றும் சில படங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் "மிகவும் வருத்தமான, அதிர்ச்சியான நிலையில் இருக்கிறேன். எனது பல முயற்சிகளுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் நாளை முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. ’இவன் தந்திரன்’ ஓடாது.

எங்களால் நல்ல படத்தை மட்டும்தான் தர முடியும். அதற்கு மேல், மொத்த அமைப்பும் நொறுங்கும் போது, வேறென்ன செய்ய முடியும். தமிழக அரசு மாநில வரியை நீக்கி திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,

அப்போதுதான் படம் ஓடி, சம்பாதிக்க முடியும். இந்த பிரச்சினை தீரும் வரை, 'இவன் தந்திரன்' படத்தை கள்ளத்தனமாகவோ, இணையத்திலோ பார்க்க வேண்டாம் என தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்