Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் ஹிட்டாகியும் சம்பளத்தை ஏற்றாதது ஏன்? விஜய் சேதுபதி அதிரடி பதில்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்பதே இல்லாதவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் விக்ரம்வேதா.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஏன் சம்பளத்தை ஏற்றவில்லை என்ற விளக்கத்தை அளித்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘என் படம் வெற்றியடைந்து எல்லோரும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது.

சம்பளம் தான் முக்கியம் என்றால், நான் என் பாதையை மாற்றி வேறு வழியில் சென்று இருப்பேன், நான் அதற்காக வரவில்லை, நடிப்பின் மீதுள்ள காதலினால் மட்டுமே சினிமாவிற்கு வந்தேன்’ என்று கூறியுள்ளார்.