Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை காவ்யா மாதவன் தாயுடன் தலைமறைவு?

மலையாள நடிகை காவ்யா மாதவன் சென்ற வருடம் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது தன் தாயுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாவனா வழக்கு தொடர்பாக காவ்யா மாதவனுக்கு சொந்தமாக கம்பெனியில் போலீசார் சோதனை நடத்தினர். பாவனா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ உள்ள மெமரி கார்டு அங்கு இருப்பதாக நினைத்து அங்கு சோதனை நடத்தினர்.

இந்நிலையில் காவ்யா மாதவன் தனது தாயார் ஷியாமளாவுடன் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 11 மணி அளவில் காரில் வெளியில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் தனது தாயாருடன் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது.