Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காணாமல் போன பிரபல நடிகரின் Triumph T120 Bonneville- வருத்தத்தில் நடிகர்

பாலிவுட் சினிமாவில் சுல்தான், அகீரா, சர்கார் 3 போன்ற படங்களில் நடித்திருப்பவர் அமித் சாத். இவர் தற்போது லண்டனில் அக்ஷய் குமார் நடிக்கும் Gold படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த 24ம் தேதி படப்பிடிப்பிற்கு செல்ல அமித் வீட்டின் வெளியே வந்தபோது தன்னுடைய பைக் காணாமல் போய்யிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார், அதோடு லண்டன் போலீசாரிடமும் புகார் கொடுத்திருக்கிறார். பின் 25ம் தேதி டுவிட்டரில் தன்னுடைய பைக் கிடைத்துவிட்டதாகவும், சில சேதம் அடைந்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.