Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனிதா தற்கொலைக்கு பிறகு நக்கல் பதிவு செய்த எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். இவர் சமீப காலமாக சமூக வலைத்தள பக்கத்தில் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை கூறி வருகின்றார்.

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்துக்கொண்டார்.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது, இதை தொடர்ந்து பலரும் நீட் தேர்வே வேண்டாம் என கூறிவருகின்றனர்.

தற்போது நடிகர் எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை.ஆபீஸ் வரவேண்டாம். சம்பளம் வீடு தேடி வரும். மகிழ்ச்சிதானே’ என டுவிட் செய்து நக்கல் செய்துள்ளார்.

இதைக்கண்ட பலருக்கும் ஏன் இப்படி ஒரு டுவிட் இவர் செய்ய வேண்டும் என கோபத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.