Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங்கில் இருந்து பாதியில் ஓடிய பூனம்கவுர் மீது தயாரிப்பாளர் புகார்

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் அறிமுகமான பூனம்கவுர் தற்போது ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கமிட்டானார். ‘நண்டு என் நண்பன்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிக்க முடியாது என பாதியில் வெளியேறிவிட்டாராம்.

அதனால் பல லட்சம் ருபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் தற்போது புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது..

பூனம் கவுர் திடீர் என்று தங்கி இருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘என்னால் இந்தப்படத்தில் நடிக்க முடியாது. இனி எதுவும் பேச விரும்பவில்லை’’ என கூறினார்.

இதுபற்றி நடிகர் சங்கத்திலும், தாயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.