Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொட்டை ராஜேந்திரனுக்கு முடி இல்லாததற்கு பின் இப்படி ஒரு சோகமா?

தமிழ் சினிமாவையே தற்போது கலக்கி வரும் காமெடி நடிகர் ராஜேந்திரன். ஆரம்பத்தில் இவர் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக தான் அறிமுகமானார்.

ஆனால், பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு காமெடியில் இறங்கிவிட்டார், சினிமாவில் நடிப்பதற்கு முன் ராஜேந்திரன் ஸ்டண்ட் கலைஞராக இருந்துள்ளார்.

அஜித்தின் ஏகன் படத்தில் கூட இவர் பணிபுரிந்துள்ளார், இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் ஒரு தேங்கிய நீருக்குள் இறங்குவது போல் காட்சியாம்.

அதில் இவர் நடித்த போது அந்த நீரில் அருகிலிருந்து தொழிற்சாலையிலிருந்து வந்த கெமிக்கல் கலந்திருந்தது பிறகு தான் தெரிய வந்துள்ளது, ஒரு சில நாட்களில் அந்த கெமிக்கலால் தான் இவருடைய முடி கொட்டியதாக கூறப்படுகின்றது.