Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் திறமையாளர்களே - அறம் பட குழு கொடுக்கும் ஒரு அரிய வாய்ப்பு !

நயன்தாரா நடிப்பில் அறம் திரைப்படம் அடுத்த வாரம் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அறம் ஒரு பொழுதுபோக்கு படத்தையும் தாண்டி இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீர் பற்றி எடுத்து சொல்லும் ஒரு படம்.

ஒவ்வொரு படத்தின் ப்ரோமோஷன்களில் புடவை , மொபைல் அல்லது படத்தின் நடித்த நடிகர்களை நேரில் பார்க்கவைப்பது போன்ற விஷயங்கள் செய்வார்கள். ஆனால் அறம் குழு ஒரு படி மேல சென்று இளம் தமிழ் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு வளர உதவுவதற்கும், அவர்களை உலகிற்கு வெளிப்படுத்தவும் பணரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

அறம் படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவத்திலிருந்து இந்த யோசனை வந்துள்ளது. அறம் படப்பிடிப்பின் போது நயன்தாரா, தயாரிப்பாளர்களும் குழுவினரும் ஒரு இளம் விஞ்ஞானியை சந்தித்தனர், அந்த இளம் விஞ்ஞானி தயாரித்துள்ள ஒரு பொருள் நம் நாட்டின் மிக முக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு பல்வேறு காரணங்களால் அவருக்கு நிதியளிக்க முடியவில்லை, இதனால் கண்டுபிடிப்பாளரின் கனவு நாளின் ஒளியைப் பார்த்ததில்லை.

இவற்றில் இருந்து உத்வேகம் பெற்று, அறம் அணி மற்றும் கே.ஜே.ஆர்.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து இதுபோன்ற முயற்சிகளோடு காத்திருக்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் திறமையாளர்களுக்கு நல்லது செய்ய முடிவு செய்துள்ளனர்.