Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேற்று அஜித் ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் டே- மீண்டும் நடக்குமா என்று எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித்தின் விவேகம் படம் இவ்வருடம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அஜித்தின் 58வது படம் விவேகம் 2 என்று கூறப்படும் நிலையில் ரசிகர்கள் வேறொரு விஷயத்தை எதிர்ப்பார்க்கின்றனர். அது ஒன்றும் இல்லை ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்ற வீரம் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

இப்படி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் நேற்று ஒரு கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதாவது நேற்று (நவம்பர் 7) அஜித் நடித்த வீரம் படத்தின் டீஸர் வந்த நாள். வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகளை கிரியேட் செய்து கொண்டாடினர்.