Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த BiggBoss பிரபலம்

பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கினார் கமல்ஹாசன். தற்போது இவர் பரபரப்பாக தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாள் அன்று அடுத்தக்கட்ட விஷயங்களாக தான் என்னென்ன செய்து வருகிறேன், என்ன செய்ய போகிறேன் என்ற விஷயங்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் அன்று நடிகை சுஜா வருணி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சுஜா தற்போது தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து மகிழ்ச்சியான தருணங்கள் என்று கூறியுள்ளார்.