Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஜி.விபிரகாஷின் இணையதள சாதனை!

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா பின்னணியில்லாமல் தனது திறமையால் சினிமாவில் இந்த புகழ்பெற்ற நிலைக்கு வந்துள்ளார். காமெடி ஷோ, நிகழ்ச்சி தொகுப்பாளர் என வளர்ந்து நடிகராகிவிட்டார்.

இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனாக உயர்ந்தது. இதற்காக அவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை தாண்டியுள்ளது. இவரும் ஒரு இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து இப்போது ஒரு நடிகராக இடம் பிடிக்க முயற்சி எடுக்கிறார்.