Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியை மேடையில் வெட்கப்பட வைத்த பிரபல நடிகை

விஜய் சேதுபதி தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவருக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் நல்ல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு கேரளாவில் விருது விழா ஒன்றில் சிறப்பு விருது கொடுத்து கௌரவித்தனர், அந்த விருதை அவருக்கு வழங்கியது மஞ்சு வாரியர் தான்.

அப்போது மஞ்சு வாரியர் மைக் பிடித்து ‘விஜய் ஒரு கதை சொல்லட்டா’ என விக்ரம்வேதா ஸ்டைலில் பேசியது மட்டுமில்லாமல், ‘நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை’ என்று கூற விஜய் சேதுபதி வெட்கப்பட்டார்.

அதை தொடர்ந்து விஜய் சேதுபதியும் பதிலுக்கு ‘நானும் உங்கள் ரசிகர் தான் மேடம், நீங்க அழகா இருக்கீங்க நேரில்’ என்று சொல்லி அவரையும் வெட்கப்பட வைத்தார்.