Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு என் தலைவர், ஆனால்?- ரசிகரான பிரபல நடிகரின் டுவிட்

சர்ச்சை, பிரச்சனை என எதுவாக இருந்தாலும் சரி சினிமாவில் முதலில் பெயர் பெறுவது நடிகர் சிம்புவாக இருக்கிறார்.

அவருக்கு என்று ஏன் பிரச்சனைகள் வருகிறது என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். AAA படத்தின் படப்பிடிப்பில் சிம்பு என்ன செய்தார் என்று தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சியாக்கியது.

இந்த நிலையில் பிரபல நடிகர் சிரிஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சில சம்பவங்களால் ஒருவரை நம்மால் தவறாக நினைக்க முடியாது. ஆனால் தற்போது என்ன கூறப்பட்டுள்ளதோ அது கேட்க வருத்தமாக இருக்கிறது. என் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்ற செயல்களை மாற்ற வேண்டும். என்ன நடந்தாலும் சரி நான் உங்களின் தீவிர ரசிகன் என டுவிட் செய்திருக்கிறார்.