Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பொதுக்குழுவில் திடிர் பதற்றம் - போலீசார் குவிப்பு !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழு இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பிரகாஸ்ராஜ் , ஆர் கே செல்வமணி, எஸ் ஏ .சந்திரசேகர், தங்கர்பச்சான் மற்றும் பலர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் அசோக் குமார் மரணம், கந்துவட்டி பிரச்சனை, ஜி எஸ் டி விலை குறைப்பு போன்ற பல பிரச்சனைகள் பேசப்படும் என்று கூறிருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சேரன் தரப்பினர் மைக்கை பிடிங்கி பிரச்சனை செய்ய தொடங்கினர். விஷால் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரத்தில் பொதுக்குழு ஒத்திவைக்க படுகிறது என்று நித்தியாசர் அறிவித்தார். ஆனால் வெளியே வந்த சேரன் தரப்பினர் விஷாலை கைது செய்யவேண்டும் என்று மீண்டும் கோஷமிட்டனர், நிலைமை சற்று பதற்ற நிலைக்கு செல்ல உடனே போலிசார் அந்த இடத்துக்கு குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தி வருகின்றனர்.