Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கெடுவான் கேடு நினைப்பான்- விஷாலுக்கு பிரபல நாயகி போட்ட அதிரடி டுவிட்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஷால், சேரன் தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதுகுறித்து நடிகர் மோகன் ராமன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்ன நடக்கிறது? தயாரிப்பாளர்கள் தான் வேலை தருகிறார்கள். அவர்களை எம்ஜிஆர் மற்றும் சிவாஜி முதலாளி என்று அழைத்தார்கள். இதை பார்த்து வேதனையாக உள்ளது. உள் பூசல் காரணமாக மக்கள் மத்தியில் நாம் மதிப்பை இழந்து வருகிறோம் என்று பதிவு செய்தார்.

இதற்கு நடிகை ராதிகா சரத்குமார், கெடுவான் கேடு நினைப்பான். பிரச்சனை என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமே தவிர பத்திரிக்கையாளர்களிடம் போகக் கூடாது என்று தலைவர் கூறுவது காமெடியாக உள்ளது. எங்கேயோ கேட்ட குரல். ஜெகில் அன்ட் ஹைட் போன்று அவருக்கு மரியாதையோ நெறிமுறையோ ஒன்றும் தெரியாது என்று விஷால் பற்றி பதிவு செய்துள்ளார் நடிகை ராதிகா.