Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்வண்ணனை தொடர்ந்து நாசரும் ராஜினாமா செய்வார் - பிரபல மூத்த நடிகர் கருத்து !

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பத்திலேயே பல இன்னல்களை சந்தித்து வருகிறது. இதனிடையே விஷால் அரசியலுக்கு வருவது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலே இருக்கும் பல நிர்வாகிகளிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திடிரென்று நடிகர் சங்கம் துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். விஷால் செயல் பிடிக்காமல் தான் ராஜினாமா செய்துள்ளதாக பேசப்படுகிறது. இது பற்றி நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் கூறுகையில், "பொன்வண்ணன் இந்த முடிவை இப்போ எடுக்கவில்லை, கடந்த 5ம் தேதியை எடுத்துவிட்டார், இடையில் பல சமாதான பேச்சுக்கள் நடந்து எதுவும் ஒத்துவராமல் இன்று அறிவித்துவிட்டார்.

அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் விஷாலின் செயல் பிடிக்காமல் தான் இந்த முடிவு என்பது என் கருத்து. இன்னும் கொஞ்ச நாள் பாருங்கள் நடிகர் சங்க தலைவர் நாசரும் ராஜினாமா செய்வார் என்று குறிப்பிட்டார்.