விஜய் கிடையாது, அந்த ஒரு விஷயத்தில் அஜித் தான் பர்ஸ்ட்- பிரபல நடிகர் கூறும் சுவாரஸ்ய தகவல்
அஜித், விஜய் என இரண்டு பேரின் படங்களிலும் நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். அவர்கள் பேட்டிகள் கொடுக்கும் போது இருவருடனும் பகிர்ந்த நேரத்தை பற்றி பேசியிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சம்பத் ராஜ், சந்தானத்துடன் நடித்த சக்க போடு போடு ராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அஜித், விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் அவர், அஜித்-விஜய் இருவருமே மிகவும் நகைச்சுவையானவர்கள், ஆனால் அவ்வளவாக வெளியில் தெரியாது. அஜித் உடனே அனைவரிடமும் பழகிவிடுவார், ஆனால் விஜய் கொஞ்சம் பொறுமையாக தான் அனைவருடனும் இணைவார். ஆனால் விஜய் ரொம்ப ரொம்ப நகைச்சுவையானவர், அவர் பழக மட்டும் நேரம் எடுப்பார் அவ்வளவுதான் என்றார்.