Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு அங்கு தான் ரசிகர்கள் அதிகம், அவர்களை பற்றி அவர் படம் நடிக்க வேண்டும்- தனது ஆசையை வெளிப்படுத்திய நடிகர்

அஜித் படங்கள் எல்லாம் இப்போது போலீஸாக இருக்கிறது அல்லது ஒரு பெரிய டான் வேடத்தில் இருக்கிறது. ரசிகர்களும் அவர் எப்படி நடித்தாலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ரமேஷ் திலக் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், அஜித் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவர் வடக்கு மெட்ராஸ் கதைக்களத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும். ஒரு வேலையாக நான் அந்த பக்கம் போக வேண்டியது இருந்தது. அங்கு பார்த்தால் அஜித் அவர்களின் கட்-அவுட் தான் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் அஜித் அவர்களுக்கு அங்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.

அந்த பக்கத்தில் இருப்பவர்களின் நல்ல விஷயங்களை எடுத்துறைக்கும் ஒரு படமாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.