Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது அப்பா புதிய தகவல்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நடக்குமா?

ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவர்களது ரசிகர்களின் மிகப் பெரிய ஆசை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது அவர்களின் ஆசை நிறைவேறிவிட்டது, இருவரும் தங்களது வேலைகளிலும் பிஸியாக இருக்கின்றனர்.

அதேசமயம் விஜய் அவர்களும் அரசியலில் நுழைய இருக்கிறார் என்று நிறைய பிரபலங்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

அண்மையில் ஒரு பேட்டியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள், ஒரு தந்தையாக என் மகனுக்கு அவர் ஓடுவதற்கான எல்லா விஷயங்களையும் தயார் செய்து கொடுத்து விட்டேன். ஆனால், அவர் ஓடுவதும் ஓடாமல் இருப்பதும் அவர் கையில்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.